தாய்நாட்டுக்கு அனுப்புங்கள் தமிழ் நாட்டிலுள்ள 13 இலங்கை அகதி குடும்பங்கள் மனு
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என இலங்கை அகதிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கையளித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் இலங்கையிலிருந்து படகு வழியாக சட்ட விரோதமான முறையில் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைய தொடங்கினர்.
இது வரை 309 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் கடல் வழியாக அகதிகளாக தஞ்சமடைந்து மண்டபம் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் பொருளாதார நெருக்கடி காரணமாக தஞ்சமடைந்த இலங்கை தமிழர் களை அகதிகளாக இந்திய அரசு இதுவரை பதிவு செய்யாத காரணத்தினால் இவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் எந்த விதமான நிவாரணம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வருவாய் இன்றி தவித்த இலங்கை தமிழர்கள் ஐந்து குடும்பத்தினர் மீண்டும் சட்டவிரோதமாக கடல் வழியாக அண்மையில் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் அகதிகளாக பதிவு செய்யாமல் உள்ள இலங்கை தமிழர்கள் 13 குடும்பத்தினரை படகு மூலம் அல்லது விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு இன்றைய தினம் திங்கட்கிழமை (6) மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் மனு கையளித்துள்ளனர்.
இலங்கைச் செய்தி
மேலும் மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின் நிற்கப் போவதில்லை. எனவே அரச உத்தியோகத்தர்கள் மக்களுடன் அன்பாக நடந்து கொண்டு அவர்களுக்கு உரிய நேரத்தில் சிறப்பான முறையில் சேவையை வழங்க வேண்டும் ' என ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(03) வெள்ளிக்கிழமை மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்காக மக்கள் எங்களுக்கு ஒரு ஆணையை வழங்கி இருக்கிறார்கள்.
அதை சரியான முறையில் முன்னெடுத்து. மக்களின் பிரச்சினைகளை. விரைவில் தீர்க்க நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மன்னாரில் இடம்பெற்ற நில மோசடி இட மோசடி தொடர்பில் எல்லாவற்றையும் நாம் அறிந்திருக்கிறோம்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரச்சினைகள் என்று பார்க்கும் இடத்தில்இ கடந்த 15 வருடங்களுக்கு மேற்பட்ட பிரச்சினைகளை ஒரே நாளில் தீர்த்து விட முடியாது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு இதனை எமது அரசாங்கம் தீர்த்து வைக்கும்.
சிங்கள இதமிழ்இ முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கிறார்கள்.
அதை விட நாட்டின் பிரச்சினைகளை சுலபமாக தீர்த்து வைப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பும் எமக்கு தேவை.”என அவர் தெரிவித்தார்.
COMMENTS